Friday, November 28, 2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/1008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008



பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008

பொழிவின் பொன்விழா 9/11/2008 நெல்லை

Friday, November 21, 2008

அன்பர் எல்லாம்

எழுதாமல் இருந்து விட்டேன் சில நாள் என்னை
  இறைவன் அவன் தடுத்தானா அறிய மாட்டேன்
  பழுதாகி விடாமல் எந்தனோடே 
  பைந்தமிழாள் இருக்கின்றாள் என்ற போதும்
  தொழுதவளை என்றுமே கற்று நிற்கும்
  தூயவன் நான் கொஞ்ச நாள் சோம்பினேனோ
  எழுதிடுவேன் நாளை முதல் மீண்டும் நானும்
  எனைப் பொறுக்க வேண்டுகின்றேன் அன்பர் எல்லாம்

Sunday, November 16, 2008

என்ன சொல்வேன்

மலைகளுக்குள் செல்லுகின்றேன் இறைவன் அவன்
  மகத்துவத்தை உணருகின்றேன் மரங்கள் கொண்ட
  இலைகளையே போர்வையென கொண்டு வாழும்
  எழில் கண்டு மயங்குகின்றேன் பறவைக் கூட்டம்
  அலை அலையாய்ப் பறக்கின்ற அழகும் மீண்டும்
  அழகுறவே வந்தமரும் கிளையும் கண்டேன்
  நிலையற்ற இவ்வாழ்வில் நெஞ்சம் தன்னை
  நிறைக்கின்ற இயற்கையினை என்ன சொல்வேன்

Thursday, November 13, 2008

உலகை வெல்வீர்

 இறைவன் அவன் என்னோடு இருப்பதனால்
  என்றென்றும் அன்பு செய்து வாழுகின்றேன்
  தலைவன் அவன் எனைத் தழுவிக் கொண்டதனால்
  தமிழோடு தமிழோடு வாழுகின்றேன்
  குறையென்று எண்ணாமல் அனைத்தையுமே
  கொடுத்தவனே அவன் என்று உணர்வதனால்
  நிறைவாக வாழுகின்றேன் தமிழாம் அன்னை
  நிலை பேறு தந்து நின்றாள் மகிழுகின்றேன்


  தொட்டதெல்லாம் நினைவிலே கொண்டு தந்து
  தூய தமிழ்த் தாயவளும் வாழ்த்துகின்றாள்
  கெட்டவரை நல்லவராய்க் காணுகின்ற
  கேண்மையையும் அவளேதான் தந்து நின்றாள்
  திட்டுகின்றார் என்றாலும் அவருக்காக
  தினந்தோறும் இறைஞ்சி நிற்பேன் இறைவனையே
  கட்டுரைக்கவில்லை இது உண்மை உண்மை
  கனித் தமிழீர் அன்பு செய்து உலகை வெல்வீர்

Tuesday, November 11, 2008

காத்து நிற்பாய்

அன்புக்காய் அலந்து நிற்கும் எந்தன் நெஞ்சை
  அறியார்கள் மத்தியிலே வாழ்ந்தலுத்தேன்
  தெம்பளிக்கும் அன்புதன்னை தருவதற்கு
  திருவானார் வருகைக்காய்க் காத்திருந்தேன்
  பண்புடனே அவர் வந்தார் நான்மலர்ந்தேன்
  பாசமதைக் கொண்டு வந்தார் அக மகிழ்ந்தேன்
  கண் மலராய் அவர் உறவைக் கொண்டு வாழ்வேன்
  காத்து நிற்பாய் என் இறையே மலரவரை

Saturday, November 1, 2008

இறந்து போனார்

  கக்கனென்ற ஒரு மனிதர் ஏழைகளைக்
  காப்பதற்காய் அமைச்சரென வாழ்ந்திருந்தார்
  தக்கவராய் வாழ்ந்திருந்தார் மக்கள் சொத்தைத்
  தனக்கென்று ஆக்காமல் வாழ்ந்திருந்தார்
  எக்கணமும் நேர்மையுடன் வாழ்ந்திருந்தார்
  ஏழ்மையுடன் இறுதி வரை வாழ்ந்திருந்தார்
  வக்கணையாய் இன்று செல்வம் சேர்ப்போர் எல்லாம்
  வாழ்வாரா இருக்கையிலே இறந்து போனார்