Wednesday, December 31, 2008

மலேசியத் தம்பி தங்கவேல் பொன்னாடை போர்த்துகின்றார்.அருகில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் சேலம் மாநகராட்சித் தலைவர் அவர்களும்

சேலம் அம்மப்பேட்டை ஏ.கே.மாரியப்பன் அவர்கள் நடத்தும் மார்கழிப் பெருவிழா முதல் நாள்

கொண்டிடுவாய்

அழகாய் வாழ்தலென்றால் உள்ளம்
அன்பால் நிறைதல் என்றாகும்
தெளிவாய் வாழ்தல் என்றால் பொருளைத்
தேடல் நிறுத்தல் என்றாகும்
அறிவாய் வாழ்தலென்றால் உயிர்கட்
கருளிச் செய்தல் என்றாகும்
பணிவாய் வாழ்தலென்றால் என்றும்
பாவம் செய்யா வாழ்வாகும்


துணிவாய் வாழ்தலென்றால் எதிலும்
தொல்லை காணா வாழ்வாகும்
இனிதாய் வாழ்வதென்றால் எதற்கும்
ஏக்கம் இல்லா வாழ்வாகும்
தனியாய் வாழ்வதென்றால் இறைவன்
தன்னுள் அமரும் வாழ்வாகும்
கனிவாய் வாழும் வாழ்வென்றால்
கருணை கொண்ட வாழ்வாகும்


மனிதா இந்த வாழ்வொன்றே
மனிதன் என்று உனைச் சொல்லும்
கனிதான் இருக்கக் காய் கவரும்
கருத்தை விட்டால் வென்றிடுவாய்
இனியும் என்ன வள்ளுவரை
எடுத்துப் படி நீ வென்றிடலாம்
தனியாய்த் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த
தவத்தின் மகனைக் கொண்டிடுவாய்

Tuesday, December 30, 2008

வெல்ல வேண்டும்

வெள்ளி செவ்வாய் கோயிலுக்குச் செல்லுகின்றீர்
வினை திர்க்க வேண்டுமென்று வேண்டுகின்றீர்
பள்ளி தோறும் தொழுகின்றீர் உருவமற்ற
படைத்தவனின் அருளுக்காய் இறைஞ்சுகின்றீர்
கன்னி மகன் தேவ மைந்தன் அருளதற்காய்
கால் மடித்து மண்டியிட்டுத் தொழுது நின்றீர்
பன்னி பன்னித் தொழுகின்றீர் கடவுளையே
படைத்தவன்தான் அன்பு என்றல் மறந்து நின்றீர்


படைத்தவனைத் தொழுது நிற்கும் உங்களுக்குள்
படைக்கலங்கள் வருவதிலே நியாயமுண்டா?
அடுத்தவனுக்கு உதவுவதே மனிதம் என்று
ஆண்டவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்
கெடுத்தொழியும் ஒரு சிலரை இணைந்து நின்று
கீழ்மை நிலை தனை உணர்த்தி திருத்த வேண்டும்
படித்தவரே பக்தியென்றால் அன்பு என்ற
பரம் பொருளின் நிலை உணர்த்தி வெல்ல வேண்டும்

Saturday, December 27, 2008

உவமையற்று வென்றதாலே

தமிழை நான் அமுதென்று சொல்ல மாட்டேன்
தேவர் மட்டும் சதி செய்து உண்டதாலே
தமிழை நான் பாலென்று சொல்ல மாட்டேன்
தரிக்காது திரிந்து வீணாவதாலே
தமிழை நான் தாயென்று சொல்ல மாட்டேன்
தாயவளும் மருமகளால் மாறலாலே
தமிழை நான் வேலென்று சொல்ல மாட்டேன்
தாவி ஒரு உயிர் பறிக்கும் கொடுமையாலே


தமிழை நான் நிலவென்று சொல்ல மாட்டேன்
தான் தேய்ந்து தேய்ந்து மீண்டும் வளரலாலே
தமிழை நான் மதுவென்று சொல்ல மாட்டேன்
தனை மறந்து ஏழையரை அழிப்பதாலே
தமிழை நான் வாளென்றும் சொல்ல மாட்டேன்
தமிழருக்குள் பகை வளர்த்துப் பிரித்ததாலே
தமிழை நான் தமிழென்றே சொல்லி டுவேன்
தனக்கிணையாய் உவமையற்று வென்றதாலே

பிரிவோம்

வயிற்றினிலே பிறந்ததெல்லாம் உறவா இல்லை
வாழ வந்த மனைவி யவள் உறவா
பயிற்றி வந்த ஆசிரியர் உறவா இல்லை
பள்ளியிலே வந்த நட்பு உறவா
கயிற்றினிலே ஆட்டுகின்ற உறவாம் அந்தக்
கடவுள் அவன் உறவொன்றே உறவு
அயர்ச்சி யின்றி அவன் அடிகள் தொழுவோம்
அவன் அறிமுகத்து உறவையெல்லாம் பிரிவோம்

Friday, December 26, 2008

தகுதியேதும் இல்லாராகி

ஏசு வந்தார் சிலுவையிலே அடித்தோம் நல்ல
இசுலாத்தை இறைவன் அவர் தூதராக
மாசின்றிச் சொல்ல வந்த நபி பெருமான்
மடையர்களாய் அவர் மீதும் கல்லெறிந்தோம்
கூசாமல் பெரியவர்கள் அனைவரையும்
கொல்லுவதில் பெருமை கொண்டோம் மானிடரே
பேசுகின்றீர் பலவாறாய் பெருமை கொண்டு
பேசுதற்கு தகுதி யேதும் இல்லாராகி

மதத்தார் கடன்

இளமையிலே வறுமை அது கொடியதென்று
எப்பொழுதோ சொல்லிச் சென்றாள் அவ்வை யவள்
உளம் கொண்டார் ஆளுபவர் எல்லாம் என்றால்
உலகினிலே வன்முறைகள் இலவே இல்லை
களம் காண வைக்கின்றார் ஏழைகளை
கதைக்கின்றார் அவர்களிடம் மதங்கள் பற்றி
பிணமாக்கிப் பார்க்கின்றார் பலரை இங்கு
பேதையான இளைஞர்களே வீழுகின்றார்


துணி எடுத்துத் தர முடியாத் தந்தை விட்டு
தூர வந்து வறுமையினால் திருடனாகி
பிணி வறுமை திர்ப்பதற்கு பணத்தைக் காட்டி
பின்புலமாய் இருப்பதுவாய் நம்ப வைத்து
அணியாக்கி அனுப்பி வைத்தார் ஏழை தன்னை
ஆர் என்று கேட்கின்றார் அவனை இன்று
வணிகமதாய் ஏழையர் தம் வறுமை தன்னை
வளைக்கின்றார் இறைவனது வழியறியார்

மதங்களுக்குள் சண்டையில்லை இலவே இல்லை
மனிதர்களின் மடமையினால் சண்டையிங்கு
விதம் பிரித்து வினை விதைத்து தலைமை தாங்கி
வெறியூட்டி மனம் கொன்று பலரைக் கொன்று
அடம் பிடித்து அலைகின்றார் அழித்தல் செய்வார்
அவர் தமையும் திருத்தி நல்ல மனிதராக்கி
புடம் போட்ட தங்கமதாய் மாற்றல் நல்ல
புனிதமதை போற்றுகின்ற மதத்தார் கடன்

Monday, December 22, 2008

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர்கள்

விழாவின் புகைப்படம்

Friday, December 19, 2008

அதிகாலை 2.30 மணிக்கும் கலையாத சுவைஞர்கள்

தமிழ்க்கடலின் நிறைவுரை

தமிழ்க்கடல் நிறைவுரை

தமிழ்க்கடலின்நிறைவுரை அதிகாலை 2 மணி

தமிழ்க்கடலின் நிறைவுரை

விழா பொறுப்பாளர் கண்ணன் புகைப்பட நிறுவன உரிமையாளர் மாரியப்பன்

நெல்லை ஜெயந்தாவுடன் தமிழ்க்கடல்

கவிமாமணி உரை

கவி மாமணி உரை

கவி மாமணி உரை நள்ளிரவு 12 மணி

கவிமாமணி அப்துல் காதர் வாணியம்பாடி

திருமதி மணிமேகலை சித்தார்த்தன் சென்னை

திரைப் படப் பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா

கவிப் பாண்டியன் அகில இந்திய வானொலி நெல்லை

கவிஞர் நந்தலாலா

பேராசிரியர் வே.சங்கரநாராயணன் சேலம்

ஆசிரியை திருமதி விஜயலட்சுமி முத்தியால்ராஜ் கோயில்பட்டி

பேராசிரியர் வே.சங்கரநாராயணன் சேலம்

பெரியார் சொன்னர்

கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லுகின்ற
காரணத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார்
படபடப்பே இல்லாமல் மிகத் தெளிவாய்
பதிலளித்தார் பெரியாரும் மிகச் சிறப்பாய்
படம் இல்லை சிலை இல்லை படைத்தவனாம்
பார் படைத்த இறைவனுக்கு உருவம் இல்லை
திடமாகச் சொல்லுகின்ற இசுலாம் மார்க்கம்
செப்புவதை மறுக்கின்றார் இந்து மக்கள்


வடம் போட்டுத் தேரிழுத்து கோயில் கட்டி
வணங்குகின்ற கிறிஸ்துவையும் இந்துவையும்
புடம் போட்ட இசுலாத்தார் மறுத்து நின்றார்
புரிந்து கொண்டேன் அன்றே நான் புரிந்து கொண்டேன்
இவர் கடவுள் இல்லையென்று அவர்கள் சொன்னார்
அவர் கடவுள் இல்லையென்று இவர்கள் சொன்னார்
அவரவர்தம் கருத்தினையே கூட்டிப் பார்த்தேன்
அதையேதான் நான் சொன்னேன் கடவுள் இல்லை

பேராசிரியை ரேவதி கிருபாகரன்

திரைப் படப் பாடலாசிரியர் பழநி பாரதி

கவி மாமணி அப்துல் காதர் தமிழ்க்கடல் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி

கணக்காயர் அய்யா லோகநாதன் திருப்பூர்

தோழர் ஸ்டாலின் குணசேகரன் ஈரோடு

ஒளிப் பதிவுக் கலைஞர் நடிகர் இளவரசு

பழனியப்பா சகோதரர்கள் பதிப்பகம் குழந்தைக் கவிஞர் செல்லகணபதி

பொழிவின் பொன் விழாச் செயலர் வழக்கறிஞர் மதார் மொய்தீன்

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் கம்பம் பாண்டித்துரை

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் பாஸ்கரன் பொறியாளர் விழுப்புரம்

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் பூமா தேவி மதுரை

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் புதுக்கோட்டை சரவணன்

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் கணிப் பொறியாளர் பதமாவதி அவர்கள் திருச்சி

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் கணிப் பொறியாளர் பத்மாவதி திருச்சி

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் நா.கி.பிரசாத் கோவை

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர்களுடன் ஒய்வு பெற்ற வணிக வரி அதிகாரி தம்பி சங்கரலிங்கம் அவர்கள்

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் இல.சக்தி வடிவேல் கோவை

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு பங்கேற்பாளர் நாமக்கல் ஆசிரியர் நாராயணமூர்த்தி

Thursday, December 18, 2008

காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பெரியவர் மார்க்கண்டேயன் அவர்கள் வாழ்த்துரை

இளவரசு.குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி.நெல்லை ஜெயந்தா கவிஞர் நந்தலாலா மன்னார்குடி காமராஜ்.கோவில்பட்டி விஜயலட்சுமி

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் வாழ்த்துரை

ஒளிப்பதிவுக் கலைஞர் நடிகர் இளவரசுவிற்கு அடிகளார் பொன்னாடை அணிவித்தல்

பொழிவின் பொன்விழாவை பெருமைப் படுத்தியவர்கள்

குன்றக்குடி அடிகளார் தலைமை உரை

Tuesday, December 16, 2008

ஏழை சாதி

 சாதி சொல்லி ஏழையரைப் பிரித்து வைத்து
  சரியாக விஷ விதையை விதைத்து வைத்து
  பாதிக்கா இடத்தினிலே இருந்து கொண்டு
  பணக்காரர் பத்திரமாய் வாழ்கின்றார் காண்
  நீதி காக்க பயிலுகின்றார் மனத்தினிலும்
  நீசர்களே இவ்விதையை விதைத்து உள்ளார்
  பாதிக்கப் பட்டாரைக் காப்பதற்கு
  பணம் படைத்தோர் வருவாரோ மாட்டார் மாட்டார்


  ஏழையர்கள் ஒரு சாதி /பணம்படைத்தோர்
  எல்லோரும் ஒரு சாதி உணர்வீர் நீரே
  வாழையடி வாழையென ஏய்த்து வாழ்வார்
  வளைத்து விட்ட செல்வத்தைக் காப்பதற்காய்
  கோழைகளாய் இளையவரின் மனத்தில் இந்தக்
  கொடுமையினைப் புகுத்துகின்றார் புரிந்து கொள்வீர்
  நாளை அவர் வீட்டுப் பெண்ணை மணமகளாய்
  நல்குவரோ தன் சாதி ஏழைக்கங்கு


  சாதிகளின் பெயராலே நடக்கும் எந்தச்
  சதியினிலும் ஏழைகளே மாளுகின்றார்
  பாதிப்பை தூண்டி விட்ட பணம் படைத்தோர்
  பத்திரமாய் குளிர் அறையில் தூங்குகின்றார்
  சாதியையே சொல்லி வாழும் அவர் தம் வீட்டில்
  சாதி ஏழை அனுமதிக்கப் படுவதில்லை
  நீதி உணர் இளைஞர்களே ஏழைகளே
  நீரெல்லாம் ஒரு சாதி ஏழை சாதி
   

Saturday, December 13, 2008

தந்தையும் தாயும்

அடிகளாரின் தலைமை உரை

அடிகளார் பொன்னாடை போர்த்துதல்

அடிகளார் விழா நாயகருக்கு பொன்னாடை போர்த்துதல்

நினைவுக் கேடயம் வழங்கப் படுதல்