Saturday, December 24, 2011

பெருமை ஆனார் பெரியார் எம்.ஜி.ஆர்.

மக்களின் வாழ்க்கைக்காக வாழ்ந்தவர் இருவர் இன்று
மக்களின் நெஞ்சுக்குள்ளே மாறாத மணமேயானார்
பொக்கை வாய்ப் பெரியாரோடு பொன்மனச் செம்மல் என்னும்
தக்கவர் இருவர் ஆமாம் தமிழர் தம் பெருமை ஆனார்

Sunday, December 18, 2011

அய்யா அவர்களோடு நானும் எனது துணைவியாரும்


அய்யாவின் எழுத்துக்களுக்கு நான் ரசிகன். இசை அறிவும் மிக்கவர் அய்யா அவர்கள். நெல்லையில் பிறந்தவர் அல்லவா

அன்பு அய்யா காவற்றுறை முன்னாள் தலைவர் நடராஜ் அவர்களோடு


நெல்லைக்கு வந்திருந்த அய்யா இந்திய காவற்றுறை அதிகாரி ந்டராஜ் அவர்களொடு எனது இல்லத்தில்

நன்றி

நெல்லைக்கு வருகின்ற நல்லவர்கள்
நேராக என் இல்லம் வருகின்றார் காண்
அள்ள அள்ளக் குறையாத அன்னை தமிழ்
அளித்திட்ட அன்பெல்லாம் பகிர்கின்றார் காண்
கொள்ளை கொண்டு செல்கின்றார் எந்தன் உள்ளம்
கோடி யென்ன கோடி அவை தூசு என்பேன்
நல்லவரே உங்களது அன்பினால் தான்
நான் இன்றும் வாழுகின்றேன் நன்றி நன்றி

Sunday, December 11, 2011

ஏளனம் செய்ய விட்டார்

பாரதி பிறந்தான் இந்தப் பைந்தமிழ் நாட்டில் வந்து
வேரெது விழுதெது என்ற விபரங்கள் சொல்லுதற்காய்
ஆரதைக் கேட்டார் இங்கு அவரவர் ஆட்டம் போட்டார்
சீரெதும் நினைத்தாரில்லை சிந்தனை இழந்தே நின்றார்
நீரிதன் புதல்வர் என்ற நினைவினை அகற்றி விட்டு
ஊரெல்லாம் கொள்ளையிட்டார் உறவிற்கே பந்தலிட்டார்
யாரிவர் என்று இந்த மக்களைக் கலங்க விட்டார்
யாவரும் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய விட்டார்

Monday, December 5, 2011

பண்புகளால் வென்றிடலாம்

அன்பு செய்து வாழுங்கள் வறியவர்க்கு
ஆன மட்டும் உதவுங்கள் உதவி வேண்டி
நண்பரல்லார் வந்தாலும் மன மகிழ்ந்து
நலம் பலவும் செய்யுங்கள் உறவார் கூட
பண்பின்றி பல துன்பம் தந்திருந்தும்
பசித் துன்பம் இன்றி அன்பாய்க் காத்திடுங்கள்
கண்ணுதலின் பேரிறைவன் காத்து நிற்பான்
கவலையின்றி பண்புகளால் வென்றிடலாம்

Sunday, December 4, 2011

நான் பணிந்து நின்றேன்

அப்பா என்றுனை அழைத்தேன் ஏற்றுக் கொண்டாய்
அய்யனே அண்ணாமலை அழகனே நீ
அப்பா என்றெனை அழைக்க ஆசை கொண்டார்
அன்புடனே திருலோகசந்தர் என்பார்
ஒப்பில்லாத் தமிழன்னை தந்த வரம்
உயர் அன்பைத் தருகின்ற தெந்தனுக்கு
இப்பாரில் இவரைப் போல் உள்ள பிள்ளை
எனக்களித்த இறைவனே நான் பணிந்து நின்றேன்