Thursday, July 14, 2016

எல என்ன காலேல யே வந்து நிக்கே. வாச்மேனில்லையா.

இல்ல அண்ணாச்சி நம்ம வளையல் கட சேட் பெரிய வீட்டுச் சாலாஜியப் பாக்கணும்ன்னார்.வாசலிலே நிக்கார். அது என்னண்ணாச்சி சாலாஜின்னா.

எல அவங்கிட்ட எப்படிப் பழக்கம். அங்கனயும் போயி பிச்சையெடுத்திட்டியா.

இல்ல அண்ணாச்சி அவர் கட கிட்டத்தான நம்ம பிச்சையா சைக்கிள் கட வச்சிருக்காம். ஒரு நா அங்கன போயி சைக்கிள் எடுக்கப் போனேன். அவராத்தான் என்னயப் பாத்துபெரிய வீட்டுச் சாலாஜியோட இருப்பீங்கள்ளா தம்பி. உள்ள வாங்கண்ணார். ஒரு டீ குடுத்தாரு அண்னாச்சி. அந்த டீக்காக அடிக்கடி அங்கன போயிப் பழக்கம் ஆயிடுச்சி அண்ணாச்சி. அது சரி அண்ணாச்சி சாலாஜின்னா என்ன அர்த்தம்.

எல் மூதேவி அத்தான்னு அர்த்தம்டா.

வாசல்ல நிக்காரு என்ன செய்ய.

எல துண்ட மாத்திட்டு வேட்டியக் கட்டிட்டு வாரேம்.முன் ரூம்ல ஒக்காரச் சொல்லு.

சரிதாம் அண்ணாச்சி இப்படியே ஒங்களப் பாத்தா பன்றி மலைச் சாமின்னு நெனச்சு கும்பிட்டுரப் போறாரு

காலையில வாரியலடி படணும்ன்னு வந்திருக்கியால.

என்ன ரமண்லால் நல்லா இருக்கியா. தங்கச்சி புள்ளைகள்ளாம் நல்லா இருக்கா.


அதுக்கென்ன சாலாஜி எல்லாரும் நல்லாத்தாம் இருக்காங்க.

வெடியக்காலமே வந்திருக்கீரே.என்ன விசேசம்.

அண்ணிக்கே அம்பி சார்ட்ட சொன்னேனே.

அந்தப் பய ஒம்ம வீட்டு டீயைப்பத்தித்தான் சொன்னான்.இன்னிக்குத்தான் நீரு வாசலுக்கு வந்தப்புறம்தாம்தாம் வாயைத் தொறக்காம்.சொல்லும்

மச்சான் ஒங்க தங்கச்சிதான் அண்ணாச்சி கிட்ட போயிச் சொல்லிட்டு வாருங்கண்ணா.அவளும் வாரேன்னுதாம் சொன்னா. நாந்தாம் நானே
போயிச் சொல்லிட்டு வாரேண்ணு சொன்னேன்.

என்ன விசயம்   மாப்பிள

நம்ம பலசரக்குக் கட சுப்பையா இருக்காருல்லா.அவரு மகன்

 நெல்லையப்பன்.ஒங்க செல்ல மருமக மஞ்சு காலேஜ் போகும் போதெல்லாம்
பின்னாலய போயி சங்கடப் படுத்துதாம். அதாம் சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேம்.

சரி விடும் நாம்  பாத்துக்கிடுதேம். நிம்மதியாப் போயிட்டு வாரும்.
நானே ஒங்ககிட்ட சொல்லாணும்ன்னு நெனச்சேம் பாஸ். ஒரு நேரம் போல ஒரு நேரம்  இருக்க மாட்டிகள்ளா நீங்க அதாம் சொல்லல

எல பாஸ்ண்ணு சொல்லாதேண்ணு எத்தன தரம் சொல்லியும் அறிவில்லையால.ஒன்உத் தெரிஞ்சிருந்தும் சொல்லலண்ணா நெல்லையப்ப பயகிட்டேயும் சீட்டிங் எதும் போட்டுக்கிட்டிருந்தயால,

என்ன நீங்க என்னைக்கு நம்பியிருக்கியோ

சரி நாயே போயி சுப்பையா பயலயும் அவம் மகனையும் கையோட கூட்டிட்டு வா.


============================---------------------------------------------------------------------


0 மறுமொழிகள்: